
தாசேக் கெளுகோர், ஜூலை-28- பினாங்கு, தாசேக் கெளுகோரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு நான்காவது பன்றிப் பண்ணைப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொற்று இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, கால்நடை சேவைத் துறை கூறியது.
கம்போங் செலாமாட்டில் உள்ள மற்ற பன்றிப் பண்ணைகளும் செபராங் பிறையில் உள்ளவையும் பாதிக்கப்படவில்லை என, அத்துறையின் தலைவர் Dr சாய்ரா பானு மொஹமெட் ரெஜாப் ( Dr Saira Banu Mohamed Rejab) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 4 பண்ணைகளில் இதுவரை 1,083 பன்றிகள் அழிக்கப்பட்டு, பண்ணை நிலங்களிலேயே புதைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 2 பண்ணைகளில் பன்றிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று தொடங்குகிறது; எனினும் பன்றிக் காய்ச்சல் பரவிய ஏராளமான பன்றிகள் இறந்து விட்டது சோதனையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 4 பண்ணைகளில் மொத்தமாக 6,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் இருப்பதாக அறியப்படுகிறது.