Latestமலேசியா

டத்தோ டேவிட் ஆறுமுகம் & எம்.எஸ்.பிரீட்டோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-2 – உள்ளூர் இசைத் துறை ஜாம்பவான்களான ‘Alleycats’ புகழ் டத்தோ டேவிட் ஆறுமும் மற்றும் பாடகர் எம்.எஸ்.பிரீட்டோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Hari Sara Production நிறுவனத்தின் ஏற்பாட்டில் பினாங்கு கொம்தார் ஆடிட்டேரியம் அரங்கில் நடைபெற்ற ‘கலைஞர்களின் சங்கமம் 2025’ நிகழ்ச்சியில் அந்த கௌரவம் வழங்கப்பட்டது. நீண்ட நெடிய இசைப்பயணத்தில் ஆற்றியக் கலைச்சேவைக்காக டேவிட் ஆறுமுகமும் பிரீட்டோவும் சிறப்பிக்கப்பட்டனர்.

நலிந்த கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, ஏற்பாட்டாளர் ஹரி சாரா தெரிவித்தார்.

அவ்வகையில் 3 நலிந்த கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. பாடகர்கள் ஆறுமுகம், தேவநாராயணன் மற்றும் பாடகி சந்தனமேரி ஆகியோரே அவர்களாவர்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான கலைஞர்களும், பிரமுகர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!