
லூமூட், ஆகஸ்ட்-3,
பேராக், லூமூட்டில் திறந்தவெளி கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற போது ஜெல்லி மீன்கள் கொட்டியதால், சுமார் 40 போட்டியாளர்களை காயமடைந்தனர்.
Teluk Senangin கடற்கரையில் நேற்று காலை 8 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பேராக் சுல்தானின் புதல்வர் Raja Kecil Besar Perak, Raja Datuk Seri Azlan Muzaffar-ரும் போட்டியாளர்களில் ஒருவராவார்.
எனினும் அவர் உட்பட 200-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டியாளர்கள் நீச்சலை வெற்றிகரமாக நிறைவுச் செய்தனர்.
பல்வேறு வயதிலான போட்டியாளர்கள் பங்கேற்ற அப்போட்டியில், 9 முதல் 10 வயது சிறுவர்களுக்கான பிரிவின் முதல் 15 நிமிடங்களிலேயே, திடீரென ஒரே நேரத்தில் ஜெல்லி மீன்கள் தாக்குதல் நடத்தின.
அதில் காயமடைந்தவர்களில் 2 சிறார்கள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மற்றவர்களுக்கு, சம்பவ இடத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.
இந்த திறந்தவெளி கடல் நீச்சல் போட்டியில் ஜெல்லி மீன்களின் தாக்குதல் வழக்கமாக ஏற்படும் சவாலே எனக் கூறிய ஏற்பாட்டுக் குழு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் போட்டியை நடத்தியதாகத் தெரிவித்தது.