
குடாட் சபா, ஆகஸ்ட் 4 – சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சிகளில் நேரடியாக பங்களிக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை தேசிய ஒற்றுமை அமைச்சு மற்றும் நிதி அமைச்சு, உள்நாட்டு வருவாய் வாரியங்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்களை ஆதரிக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் கூறியுள்ளார்.
ஒற்றுமையை மையமாகக் கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைப்பதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மிக அவசியமாக கருதப்படுகின்றது.
அதே நேரத்தில் இது அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சி என்பதையும் ஆரோன் குறிப்பிட்டிருந்தார்.