Latestமலேசியா

கோத்தா திங்கியில் பஸ்ஸிலிருந்து இறங்கி சாலையை கடந்தபோது கார் மோதி பெண் மரணம்

கோத்தா திங்கி, ஆக 6 – கோத்தா திங்கி , Jalan Sungai Rengit 42 ஆவது கிலோமீட்டரில் ஒரு பஸ்ஸிலிருந்து இறங்கி சாலையை கடந்து சென்றபோது கார் மோதியதில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.

இன்று விடியற்காலை மணி 4.10 அளவில் நகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தில் கடுமையாக காயம் அடைந்த 55 வயது மாது விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Yusof Othman தெரிவித்தார்.

Sungai Renggitட்டிலிருந்து கோத்தா திங்கி நோக்கிச் சென்ற Perodua Myvi கார் மோதியதால் அந்த பெண் மரணம் அடைந்ததாக Yusof Othman கூறினார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரான 51 வயதுடைய ஆடவர் காயம் அடையவில்லை.

1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41 ஆவது பிரிவு (1) இன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!