Latestமலேசியா

“இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்”;அயர்லாந்தில், இந்திய வம்சாவளி சிறுமிக்கு இனவெறி அடிப்படையிலான கொடூரத் தாக்குதல்

அயர்லாந்து, ஆகஸ்ட் 7 – கடந்த மாதம் 4 ஆம் தேதி, அயர்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர் கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது, அக்கும்பல் ‘இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ மற்றும் ‘டர்ட்டி இந்தியன்’ என்ற கடுமையான வார்த்தைகளால் அச்சிறுமியைத் திட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் அயர்லாந்தில் ஒரு இந்திய வம்சாவளி குழந்தை மீது பதிவு செய்யப்பட்ட முதல் இனவெறித் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்சைக்கிளின் சக்கரத்தைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளைத் தாக்கியுள்ளனர் என்று அவரின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தந்தை இல்லாத குடும்பத்தில் செவிலியராக பணியாற்றும் அந்த இந்திய வம்சாவளி தாய், இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது மகள் மிகவும் பயந்த நிலையில் இருகின்றார் என்றும் வெளியே விளையாட மறுக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!