Latestமலேசியா

அலோர் ஸ்டாரில் கொள்ளையர்களின் காரால் மோதப்பட்டு போலீஸ்காரர் மரணம்

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-8 – கெடா, அலோர் ஸ்டாரில் வீடு உடைத்துத் திருடும் கும்பல் தப்பியோடுவதைத் தடுக்க முயன்ற போது, அக்கொள்ளையர்களின் காரால் மோதப்பட்டு போலீஸ்காரரர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் Taman Golf பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக அங்கு சந்தேகத்திற்குரிய நடவடிக்கை நடப்பதாக பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்து, 5 போலீஸ்காரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

அப்போது, ஒரு வீட்டிலிருந்து பாதுகாப்பு பெட்டகத்தை ஒரு கும்பல் திருடிக்கொண்டிருந்தது.

காரிலிருந்து இறங்கி அவர்களை சரணடையக் கூறச் சென்ற போலீஸ்காரரை, Lexus காரோட்டியான சந்தேக நபர்களில் ஒருவன் மோதித் தள்ளினான்.

இதில் 35 வயது கார்ப்பரல் Mohd Hafizul Izham Mazlan சம்பவ இடத்திலேயே மாண்டார்.

ஒருவன் அங்கேயே போலீஸாரிடம் பிடிபட்ட வேளை, மேலும் மூவர் அதே காரில் தப்பியோடினர்.

தப்பியோடும் போது கூட பொது மக்களுக்குச் சொந்தமான ஒரு காரை அக்கும்பல் திருடிச் சென்றது.

எனினும் அடுத்த 1 மணி நேரத்திற்குள் ஜித்ராவில் அவர்கள் கைதாகினர்.

24 முதல் 26 வயதிலான அந்நால்வரும் ஜோகூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களில் ஒருவனுக்கு வீடு உடைத்து திருடுதல், வாகனத் திருட்டு என பல்வேறு குற்றங்களுக்காக 77 குற்றப்பதிவுகள் உள்ளதும் கண்டறியப்பட்டது.

இவ்வேளையில் மரணமடைந்த போலீஸ்காரர், மனைவி மற்றும் 4 பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!