Latestமலேசியா

பிரதமரின் 2026 புத்தாண்டு அறிவிப்புகள்: மடானி அரசின் மக்கள் நல கடப்பாட்டுக்கு KESUMA வரவேற்பு

 

 

புத்ராஜெயா, ஜனவரி-6 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய 2026 புத்தாண்டு உரையை, மனிதவள அமைச்சான KESUMA பெரிதும் வரவேற்றுள்ளது.

 

மடானி அரசின் மக்கள் நலக் கொள்கைகள், சமூக நீதியை வலுப்படுத்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சி ஆகியவற்றை இந்த உரை மீண்டும் உறுதிப்படுத்துவதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

 

பிரதமரின்

முக்கிய அறிவிப்புகளில், e-hailing, p-hailing உள்ளிட்ட கிக் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி மற்றும் சமூக பாதுகாப்புக்காக RM100 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிதி, திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

 

மேலும், தவறுதலாக வருமான விவரங்களில் பிழை ஏற்பட்ட அரசு ஊழியர்களுக்கு, 2026 முழுவதும் அபராதமில்லா CP500 கட்டண தளர்வு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புத்தாண்டு உரையில் அறிவிக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் பொது மக்களுக்கு உண்மையான பயனை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுவதை KESUMA உறுதிச் செய்யும் என்றும் ரமணன் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!