
குவாந்தான் – ஆகஸ்ட் 8 – ‘கெந்திங் ஹைலேண்ட்ஸில்’ கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கேசினோ சிப்கள் திருட்டு சம்பவத்தில், முக்கிய சந்தேக நபர் ஒருவன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
பகாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் இன்று அளித்த தகவலின்படி, சந்தேக நபரை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருட்டில் தொடர்புடைய பிற நபர்களையும் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்டர்போல் (INTERPOL) சர்வதேச காவல்துறை அமைப்புடன் இணைந்து, அந்த நபரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
44 வயதுடைய விக்டர் லீ என்ற அந்த உள்ளூர்வாசி, காஜாங்கைச் சேர்ந்த முன்னாள் கேசினோ ஊழியர் என அறியப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.