Latestஉலகம்

தாய்லாந்தில் வேலையில்லாத ஆடவனால் தீ வைத்து கொளுத்தப்பட்ட 2 மலேசியர்கள்

பேங்கோக், ஆகஸ்ட்-9- தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் 2 மலேசிய சுற்றுப் பயணிகள், வேலையில்லாத ஆடவனால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், பேரங்காடி ஒன்றின் வெளியே படிட்கட்டில் அமர்ந்திருந்த 26 வயது Ong Yik Leong, 27 வயது Gan Xiao Zhen இருவருமே பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களை நெருங்கிய ஆடவன், பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த thinner இரசாயனத்தை மேலே ஊற்றினான்.

இதனால் தப்பியோட முயன்ற இருவரையும் துரத்திச் சென்ற சந்தேக நபர், அவர்கள் மீது தீ வைத்து விட்டான்.

அங்கிருந்து அவன் ஓட முயன்றாலும் பொது மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பாதுகாவலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் அந்த அனாமதேயத் தாக்குதலில் தாம் ஈடுபட்டதாக போலீஸிடம் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்ட மலேசியர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் பற்றி எரியும் தீயை, பொது மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயலும் வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!