
சிரம்பான், ஆகஸ்ட் 9 – போர்ட்டிக்சன் கடல்பகுதியில் மட்டி மீன்களை (kerang) சேகரிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டுமென்று நெகிரி செம்பிலான் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் (PBPKL) மேற்கொண்ட கடல் நீர் மாதிரி பரிசோதனையில், பயோடாக்சின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அத்துறை இயக்குநர் காசிம் தாவே தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ தடை அறிவிப்பு வெளியிடப்படும் முன், இரண்டாவது மாதிரி சோதனை மேற்கொள்ளப்படுமென்று அவர் அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, பாசிர் பஞ்சாங் கடற்பகுதியில் பாசி பூப்பால் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியதைத் தொடர்ந்து மீனவர்களிடமிருந்து புகார்கள் வந்ததெனவும், போர்ட்டிக்சன் கடல் நீர் மற்றும் மட்டி மீன்கள் மாதிரிகளாக எடுக்கப்பட்டதெனவும் அறியப்படுகின்றது.