Latestமலேசியா

8.6 மில்லியன் மக்கள் STR உதவித்தொகையைப் பெறுவர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 – STR திட்டத்தின் கட்டம் 3 இன், 650 ரிங்கிட் உதவித்தொகை, நாளை முதல், 8.6 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்கும் நோக்கில், 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் திறக்கப்பட்டதால், ஜனவரியில் கட்டம் 1-இல் இருந்த 8.3 மில்லியன் பெறுநர்களுடன் ஒப்பிடும்போது, தற்போது 3 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.

இந்த உதவித்தொகை, தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய மற்றும் பழைய பெறுநர்களுக்கு, வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்வதுடன், BSN வங்கி கிளைகளில் பணமாகவும் வழங்கப்படும்.

மேலும், பெறுநர் தகுதி நிலையை அதிகாரப்பூர்வ STR போர்ட்டல் https://bantuantunai.hasil.gov.my மூலம் சரிபார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அதே நேரத்தில், STR தொடர்பான தகவல்களைப் பெறும் பெயரில், நம்பகத்தன்மையற்ற இணைப்புகளைப் பகிரும் தரப்பினரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!