
செகாமாட், ஆகஸ்ட்-19 – செகாமாட் ஹோட்டல் ஒன்றின் மொட்டை மாடியில் ஜோகூர் மாநிலக் கொடி தலைக்கீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவத்தை, போலீஸ் விசாரித்து வருகிறது.
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் Ahmad Zamry Marinsah அதனை உறுதிப்படுத்தினார்.
தேசிய மாதத்தை ஒட்டி ஒரு வெளிநாட்டுத் தொழிலாளியால் அக்கொடி மாட்டப்பட்டுள்ளது.
எனினும் அது தலைக்கீழாக இருந்ததை சக ஊழியர் சுட்டிக் காட்டியதை அடுத்து, கொடி சரி செய்யப்பட்டது.
அந்த வெளிநாட்டுத் தொழிலாளியும் முறையான வேலை பெர்மிட்டை வைத்திருப்பவர்; இந்நிலையில் அச்சம்பவவத்தில் தீய நோக்கம் எதுவும் இல்லையென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டு விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக
Ahmad Zamry தெரிவித்தார்.
Jalan Syed Abdul Kadir சாலையில் உள்ள ஹோட்டலில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலானது.
தேசியக் கொடிகள் தலைக்கீழாகப் பறக்க விடப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலைத்தளவாசிகள் குறிப்பாக ஜோகூர் வாசிகள் வலியுறுத்தினர்.