Latestமலேசியா

‘வேலையைச் செய்யக்கூடிய எவரும் தகுதியானவரே’: புக்கிட் அமான் CID இயக்குநராக குமார் நியமிக்கப்பட்டதை அன்வார் தற்காத்தார்

புத்ராஜெயா, ஆகஸ்ட்-20 – புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து பேசியுள்ளார்.

அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிக்கும் திறமையான நபர்களுக்கு இனம் தடையாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

இது தமக்கு ஒரு பிரச்னையே அல்ல எனக் கூறிய அன்வார், ஒரு வேலையைச் செய்யக்கூடிய எவரும் அதற்குத் தகுதியானவர் என, நிதி அமைச்சின் இன்றைய மாதாந்திரக் கூட்டத்தில் கூறினார்.

அரச மலேசியப் போலீஸ் படையின் உயர் பதவிகளில் பெரும்பாலும் மலாய்க்காரர்களே உள்ளனர்; போலீஸ் படைத் தலைவர், துணைத் தலைவர் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களில் அவர்கள் இயக்குநர்களாக உள்ளனர்.

எனவே, குமார் நியமனத்தைப் பிரச்னையாக்குவது சரியல்ல என்றார் அவர்.

பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியதே அரசாங்கத்தின் கடமையாகும் என அன்வார் சொன்னார்.

AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவராக மாற்றப்பட்ட டத்தோ ஸ்ரீ ஷுஹைலி செயினுக்குப் (Shuhaily Zain) பதிலாக, குமார் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி புதிய CID இயக்குநராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

மலேசிய வரலாற்றில் தேசியப் போலீஸ் படையில் ஓர் இந்தியர் இவ்வளவு உயரியப் பதவியை வகிப்பது இதுவே முதன் முறை.

இந்நிலையில், குமாருக்கு ‘காலதாமதமான வாழ்த்து’ என்ற கேலியான உள்ளர்த்ததோடு செய்தி வெளியிட்ட பெர்சாத்து கட்சியின் Chegubard, இப்படியே போனால் DAP-யின் Malaysian Malaysia கொள்கையை மலேசியா மெல்ல ஏற்றுக் கொள்ள வேண்டி வருமென, இனவாதமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதே Chugubard தான், இதற்கு முன் ஆயுதப் படையில் Johnny Lim, லெப்டனல் கர்னல் என்ற உயரிப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட போது, அதனையும் இனவாதமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலை நீடித்தால், மலேசியா மிக விரைவிலேயே அதன் முதல் பூமிபுத்ரா அல்லாத தலைமை நீதிபதி, ஆயுதப் படைத் தலைவர், தேசியப் போலீஸ் படைத் தலைவர்களைப் பெறுமென, அவர் கேலியாக பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!