
அலோர் காஜா, ஆகஸ்ட்-22 – மலாக்கா, அலோர் காஜா, கம்போங் பஞ்சோரில் (Panchor) 17 வயது மகளைத் தாக்கிய 40 வயது தந்தைக் கைதாகியுள்ளார்.
மும்முரமாக வீட்டுப் பாடங்களைச் செய்துகொண்டிருந்த மகளை, தாய்க்கு உணவு சூடாக்கச் சொல்லியபோது அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தை ஆவேசமடைந்தார்.
கோபத்தில் அவர் மகளை அறைந்ததுடன், பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்தார்.
மற்றொரு நாற்காலியையும் உடைத்து மகளின் முதுகிலும் தோளிலும் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மகளின் முகம் வீங்கி, உதடு மற்றும் கையில் காயங்களுடன் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் அலோர் காஜா போலீஸ் நிலையத்தில் மகள் புகார் அளித்தார்.
இதையடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் நேற்று முன்தினம் சந்தேக நபரை கைதுச் செய்து விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.