Latestமலேசியா

லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பில் DBKL மூத்த அதிகாரி ஒருவர் உட்பட ஐவரை கைது செய்த MACC

கோலாலம்பூர், ஆக 26 – 11 மாத காலமாக லஞ்ச ஊழலில் ஈடுபட்ட வந்தது தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKLலின் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து நபர்களை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைதுசெய்ததோடு, தனிப்பட்ட நபரும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் 7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகையைக் கொண்ட 19 வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டன.

மேலும் 150,000 ரிங்கிட் ரொக்கம், நான்கு தொலை தொடர்பு கருவிகள், Lexus RX 500h மற்றும் Mini Cooper வாகனங்கள் மற்றும் Hermes, Louis Vuitton காலணிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூத்த அதிகாரி JUSA B நிலையிலான அதிகாரி என நம்பப்படுவதாக MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ Saiful Ezral Arifin மலாய் தினசரியிடம் உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரம் 2009ஆம் ஆண்ட MACC சட்டததின் பிரிவு 16 (a) (B) யின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

DBKLலின் ஐந்து உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவரான அந்த சந்தேகப் பேர்வழி தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டத்தை வாங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கைதானவர்களில் அரசு ஊழியர் ஒருவர் , நிறுவன உரிமையாளர்களான இரண்டு ஆடவர்கள், 40 வயதுடைய பெண் ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் நேற்று மதியம் வாக்குமூலம் அளிக்க புத்ராஜெயா MACC தலைமையகம் வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி மன்றத்தில் பணியாற்றிவரும் 50 வயதுடைய அதிகாரி நேற்று மாலை 4 மணியளவில் தனது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!