
கோலாலம்பூர், ஆக 27 – தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL ) மூத்த அதிகாரி சொத்துடமை கொள்முதல் செய்திருப்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோலாலம்பூர் டத்தோ பண்டார் அலுவலகத்தின் தலைமையில் JUSA நிலையிலான மூத்த அதிகாரியாக அந்த தனிப்பட்ட நபர் இருந்துவருவதாக MACC யின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி ( Azam Baki ) தெரிவித்தார்.
டத்தோ பண்டார் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மூத்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவரும் அந்த அதிகாரி சொத்துடமை கொள்முதல் செய்திருப்பது முக்கியமாக அடுக்ககம் வாங்கியிருப்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. 50 வயதுடைய அந்த மூத்த அதிகாரி உடபட மூன்று தனிப்பட்ட நபர்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக லஞ்ச ஊழலில் ஈடுபட்டதன் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதர இரண்டு தனிப்பட்ட நபர்களில் ஒருவர் நிறுவன உரிமையாளர் மற்றும் 40 வயதுடைய பெண் என அறிவிக்கப்பட்டது.