
கோலாலம்பூர், செப்டம்பர்-1-மடானி அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதினால், ம.சீ.சவும் ம.இ.காவும் தாராளமாக பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேரலாம்.
அதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையென, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியுள்ளார்.
“தங்களின் பாதையைத் தீர்மானிக்க அவர்களுக்கு சுதந்திரம் உண்டு; நாங்கள் வரவேற்கிறோம்” என்றார் அவர்.
தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா வெளியேற வேண்டுமென இதுவரை குறைந்தது 2 மாநில ம.இ.கா பேராளர் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் கருத்துரைத்தார்.
ம.இ.காவின் எதிர்காலம் குறித்து யாருடனும் பேசத் தயார் என அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் முன்னதாகக் கூறியிருந்தார்.
கட்சித் தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்ந நிலையில் தான் கெடா, பினாங்கு ம.இ.கா பேராளர் மாநாடுகளில் அண்மையில் அம்முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.