
கோலாலம்பூர், ஆகஸ்ட்-5,சமூக வலைத்தளங்களில் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் எனப்படும் 3R தொடர்பாக நிந்தனைகக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, கல்வியாளரும் சமய சொற்பொழிவாளருமான Dr ரிடுவான் டீ அப்துல்லாவுக்கு(Ridhuan Tee Abdullah) எதிராக, பி.கே.ஆர் கட்சியின் நிர்வாகி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பதிவுகள் சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையிலும், பல்லின மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருப்பதாகப் புகார்தாரர் Rozan Azen Mat Rasip குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட பதிவுகள் குறித்து முழு விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதே போல் மேலும் சில சமூக ஊடகப் பயனர்கள் மீது போலீஸ் புகார் செய்யப்படும் என்றார் அவர்.
அவர்கள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் காலஞ்சென்ற தந்தையார், ஒரு மாநிலத்தின் முஃப்தி, மலாய் ஆட்சியாளர்கள் உள்ளிட்டோரை சிறுமைப்படுத்தும் வகையிலான பதிவுகளை வைத்திருப்பதாக, பத்து பி.கே.ஆர் தொகுதி நிர்வாகியான Rozan கூறினார்.



