
கோலாலம்பூர், செப்டம்பர் 22 – மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், 2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சம்பள உயர்வு தொடர்பான நல்ல அறிவிப்பு இடம்பெறலாமென சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்த அறிவிப்பை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடுவார் என அவர் கூறினார்.
சில நல்ல செய்திகள் உள்ளன என்றும் அதனை பிரதமரே அறிவிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே வேளை அது சம்பள உயர்வு சம்பந்தப்பட்டது என்பதனையும் ரமணன் தெரிவித்தார்.
2027 ஆண்டு பட்ஜெட் அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.



