Latestமலேசியா

தொழில்முனைவு, தொழில்நுட்பப் பங்களிப்பிற்கு கணேஷ் குமார் பாங்காவிற்கு MAICCI விருது

கோலாலம்பூர், செப்டம்பர் 22 – Commerce.Asia குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான கணேஷ் குமார் பாங்காவிற்கு, தொழில்முனைவு மற்றும் மலேசியாவின் தொழில்நுட்பச் சூழல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2026- ஆம் ஆண்டிற்கான MAICCI தொழில்முனைவோர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (MAICCI) ஏற்பாடு செய்த முதலாவது MAICCI Entrepreneur Summit 2026 நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் இந்த விருதை கணேஷுக்கு வழங்கினார்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களை உருவாக்குதல், டிஜிட்டல் தளங்கள் மூலம் வர்த்தகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் மலேசியாவின் புத்தாக்கச் சூழலின் வளர்ச்சிக்கு பங்களித்தல் ஆகியவற்றில் கணேஷின் தலைமைத்துவத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதைப் பெற்றுக்கொண்ட கணேஷ், தொழில்முனைவு என்பது வெறும் லாபத்தை நோக்கமாகக் கொண்டிருக்காமல், சமூகப் பிரச்சினைகளைத் தீர்வுகளாக மாற்றி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியடைய அறிவு, வணிகத் தொடர்புகள், தொழில்நுட்பம் மற்றும் உரிய ஆதரவு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!