
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஜோகூர் மக்களே தீபாவளியை முன்னிட்டு முதல் முறையாக உங்களை நேரில் சந்திக்க ஜோகூர் பாருவுக்கு வருகிறது வணக்கம் மலேசியா. எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி சனிக்கிழமை ஜோகூர், சுத்ரா மால் பேரங்காடியில் வணக்கம் மலேசியாவின் தித்திக்குதே தீபாவளி எனும் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 3 முதல் 7 வரை நடைபெறும் Colours of India விற்பனை பெருவிழாவின் ஒரு பகுதியாக வணக்கம் மலேசியாவின் இந்த இனிய ராகங்களின் இசை இரவு உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஆடல் பாடல் நிகழ்வுகளுடன், பாலன் காஷ்மீர் இசைப் படைப்பு, இலங்கை சக்தி தொலைக்காட்சியின் the crown பாட்டுப் போட்டியின் மலேசிய போட்டியாளர்களான யோஷினி மதியழகன் மற்றும் குருமூர்த்தி ஆகியோரின் இனிய கானங்கள், வருகையாளர்களை மகிழ்விக்க போட்டி என சுவாரஸியமான பல அங்கங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
அது மட்டுமா, அதிர்ஸ்ட குலுக்கு வெற்றியாளர்களுக்கு தமிழ்நாடு திருச்சி மற்றும் கேரளா கொச்சினுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் பரிசாக காத்திருக்கின்றன. அதோடு இன்னும் பல கண்கவர் பரிசுகளும் இருக்கின்றன. இதற்கான அதிர்ஸ்ட குலுக்கு எண்களை சனிக்கிழமை காலை தொடங்கி வணக்கம் மலேசியா முகப்பில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தீபாவளி குதூகலத்தை மேலும் மெருகூட்டவும் ஜோகூர் மக்களையும் அபிமான நேயர்களையும் நேரில் சந்திக்கவும் நாங்கள் தயார், எனவே ஜோகூர் மக்களே திரளாக வந்து இந்நிகழ்வில் பங்கேற்று பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். மறக்காதீர்கள்.செப்டம்பர் 6 சனிக்கிழமை சுத்ரா மால் பேரங்காடியில் வணக்கம் மலேசியாவின் தித்திக்குதே தீபாவளி கலை நிகழ்ச்சி.