மித்ராவின் தனியார் பாலர் பள்ளி மானியத் திட்டத்திற்கு RM10 மில்லியன் ஒதுக்கீடு – பிரபாகரன் தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர்-4- மித்ராவின் 2025 தனியார் பாலர் பள்ளி மானியத் திட்டத்தின் கீழ் 5,000 மாணவர்கள் பயன்பெற ஏதுவாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
B40 குடும்பங்களைச் சேர்ந்த மலேசிய இந்தியக் குழந்தைகளுக்கு தரமான, முழுமையான பாலர் கல்வி வழங்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக ‘Anak Pintar Negara Gemilang’ திட்டத்தின் கீழ் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
நிதிக்கு விண்ணப்பித்த 178 பாலர் பள்ளிகளில், கடுமையான பரிசீலனைக்குப் பிறகு 173 பாலர் பள்ளிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு, போதுமான ஆவணங்கள் இல்லாததும் காரணம் என பிரபாகரன் விளக்கினார்.
ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட்டில் 7 மில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது; எஞ்சியவை, உதவித் தேவைப்படும் தனியார் பள்ளிகளுக்கு பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
இந்த மானியங்கள் எந்த வகையில் மாணவர்களைச் சென்றடையும் என்பதையும் அவர் விளக்கினார்.
மானியம் கிடைத்த மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளிகளின் பட்டியலை செப்டம்பர் 8 முதல் மித்ராவின் இணைய அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம்.
மானியம் கிடைத்த மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிப்பதாக சில தனியார் பாலர் பள்ளிகள் மீது புகார்கள் வருவது குறித்தும் பிரபாகரன் கருத்துரைத்தார்.
இவ்வேளையில், வரலாற்றில் முதன் முறையாக மித்ராவின் அடைவுநிலை அறிக்கை, தனது தனிப்பட்ட முயற்சியில் வெளியிடப்படுவதாகவும் பிரபாகரன் அறிவித்தார்.
வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்ய அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.
தற்போதைக்கு 500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன; தேவைப்படுவோர் மித்ராவை நாடலாம் என்றார் அவர்.