
கோலாலம்பூர், செப்டம்பர்-8- சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிராக நிந்தனைக்குரியப் பதிவை வெளியிட்டது, மிரட்டியது ஆகிய புகார்கள் தொடர்பில் போலீஸார் இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கிரிமினல் மிரட்டல் விடுத்ததாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
Mdjohan Ngadin என்ற ஃபேஸ்புக் கணக்கில் போடப்பட்டிருந்தப் பதிவுக்கு கருத்துத் தெரிவித்த போது பிரதமருக்கு மிரட்டல் விடுத்ததாக, 44 வயது அவ்வாடவர் கைதானார்.
நிந்தனை மற்றும் மிரட்டல் தொடர்பில் அந்நபர் விசாரிக்கப்படுகிறார். கைதான இரண்டாம் நபர் 45 வயது ஆடவர் ஆவார்.
@mohd.soie3 என்ற டிக் டோக் கணக்கில் அரசாங்கத்தை நிந்திக்கும் மற்றும் இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அவர் விசாரிக்கப்படுவதாக குமார் சொன்னார்.