
குவா மூசாங், செப்டம்பர்-9 – கிளந்தான், குவா மூசாங்கில் 3 வெளிநாட்டவர்கள் கைதானதை அடுத்து, சட்டவிரோத ஈயச் சுரங்க நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செத்திங் (Seting) ஆற்றில் செம்பனைத் தோட்டத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மூவரும் சிக்கினர்.
இருவர் மியன்மார் பிரஜைகள், இன்னொருவர் இந்தோனேசியர் ஆவார்.
மூவரும் பெர்மிட் அனுமதி இன்றி ஈயம் தோண்டுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்; அவர்களிடம் முறையான பயணப் பத்திரமும் இல்லை.
இதையடுத்து, 500,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு ஈயச் சுரங்க உபகரணங்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் மேல்நடவடிக்கைக்காக போலீஸிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை, பறிமுதலான பொருட்களுக்கு கோத்தா பாரு மாவட்ட நில அலுவலகம் சீல் வைத்தது.