
கோலா நெருஸ், செப் 10 – லைசென்ஸ் இன்றி கார் ஓட்டியதோடு காரை நிறுத்தும்படி போலீஸ் விடுத்த உத்தரவை மீறி தப்பியோடிய பதின்ம வயது சிறுவனை இரண்டு போலீஸ் ரோந்து காரினால் துரத்திச் சென்ற போலீஸ்காரர்கள் கைது செய்தனர்.
தனது சகோதரனுக்கு சொந்தமான புரோட்டோன் வீரா காரை ஒட்டிச் சென்ற 16 வயது சிறுவனை போலீஸ்காரர்கள் துரத்திச் சென்றதைத் தொடர்ந்து ஜாலான் பண்டார் பாருவில் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டதாக Kuala Terengganu மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் வான் முகமட் ஷாகி வான் இஸ்மாயில் ( Wan Mohd Zaki Wan Ismail ) தெரிவித்தார்.
அந்த சிறுவன் இதற்கு முன் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் HK MP5 துப்பாக்கியை வெளியே எடுக்க வேண்டியிருந்தது.
விசாரணையில் அச்சிறுவன் வயது குறைந்த பள்ளி மாணவன் என தெரியவந்தது. லைசென்ஸ் இன்றி கார் ஓட்டியதற்காக அச்சிறுவனை கடுமையாக எச்சரித்து அவனுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.