
ஜோகூர் பாரு, செப்டம்பர்-12 – நேற்று பிற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை வளாகம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
மாலை 6.30 மணி வரை பெய்த மழையால், தாழ்வான கட்டங்களில் வெள்ள நீர் புகுந்தோடியது.
5 மணி வாக்கில் கனுக்கால் அளவுக்கு வெள்ள நீர் புகுந்து விட்டதை வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.
Lili கட்டடத்தில் மருத்துல உபகரணங்களையும், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றையும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவது 25 வினாடி வீடியோவில் தெரிந்தது.
தகவல் கிடைத்து, சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon அங்கு விரைந்தார்.
ஜோகூர் பாரு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் தரவுகளின் அடிப்படையில், நேற்றைய கன மழைநீர் அளவு 70 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகியுள்ளது.
இதையடுத்து வடிகால் அமைப்பிற்குள் தண்ணீரை நேரடியாக வழித்தடத்தில் கொண்டு வர சாலையோரத்தில் ஒரு சிறிய வடிகால் கட்டுவதற்கு முன்மொழியப்படும் என்றார் அவர்.