
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-13 – கெடா, சுங்கை பட்டாணி Hutan Tupah காட்டில் மலையேறிய 4 ஆடவர்கள் கனமழையால் மேலேயே சிக்கிக் கொண்டனர்.
நேற்று காலை 6.30 மணிக்கு மலையேறியவர்கள் இரவு 7 மணியாகியும் கீழே வராததால் குடும்பத்தார் கவலையுற்றனர்.
பின்னர் போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து இரவு 10.50 மணியளவில் தீயணைப்பு-மீட்புத் துறை மலையில் தேடல் பணியைத் தொடங்கியது.
எனினும் மோசமான வானிலையால் நள்ளிரவு வாக்கில் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
ஒருவழியாக அதிகாலை 4.30 மணிக்கு அந்நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக கீழே கொண்டு வரப்பட்டதாக குவால மூடா போலீஸ் கூறியது.