
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டான்.
அம்மாணவன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் நாட்டினுள் நுழைந்துக் கொண்டிருக்கும்போது தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஆணையம் (AADK) நடத்திய சோதனையில் நால்வரும் கேட்டமின் (Ketamine) பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அம்மாணவர்கள் அனைவரும் இரண்டாம் முறையாக போதைப்பொருள் உட்கொண்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவ்வழக்கு போதைப்பொருள் உட்கொண்டோருக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.