Latestமலேசியா

கோபத்தில் உணவக அலமாரி கண்ணாடி உடைத்த நபர் கைது

கோத்தா பாரு, செப்டம்பர் 17 – நேற்று பெங்கலான் செப்பா, காம்போங் லந்தாக் பகுதியிலிருக்கும் உணவகத்தின் முன் தனது பாதையை மறைத்து கார் ஒன்று நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்து உணவு பெட்டகத்தின் கண்ணாடியை உடைத்து பெரும் ரகளையை ஏற்படுத்திய ஆடவனை போலீசார் கைது செய்தனர்.

36 வயதான சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது உணவக உரிமையாளரிடம் அதிருப்தி தெரிவித்த பின்னர் தன் ஹெல்மெட்டை பயன்படுத்தி கண்ணாடியை உடைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதுடன், 25 வயதான உணவக உரிமையாளர் நேற்று மாலை போலீசில் புகார் அளித்தார் என்று கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர், முகமட் ரொஸ்டி தாவுட் (Mohd Rosdi Daud) கூறினார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிகப்பட்டு வரும் நிலையில் சந்தேக நபர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!