Latestமலேசியா

அலோர்காஜாவில் தாயும் மகளும் MPV வாகனத்திற்குள் இறந்து கிடந்தனர்

ஆயர் கெரோ, செப் 18 – அலோர்காஜா, Paya Rumput, Jalan Solok Hilirரில் , புரோட்டான் Exora MPV பல்நோக்கு வாகனத்தில் ஒரு தாயும் அவரது 25 வயது மகளும் இறந்து கிடந்தனர்.

57 வயதான ஜபானா அபு உசேய்ன் ( Zabanah Abu Hussin ) மற்றும் அவரது மகளான Intan Nur Shafiqah Othman என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் இருவரும் அலோர் காஜாவின், தாமான் கெலேமாக் ஜெயா ( Taman Kelemak Jaya ) என்ற முகவரியைக் சேர்ந்தவர்கள் என மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார் ( Dzulkhairi Mukhtar ) தெரிவித்தார்.

வாகனத்தில் ஓய்வெடுக்க நிறுத்தப்பட்டபோது, ​​இயந்திரம் மற்றும் air conditioner தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

பரிசோதனையின் போது, ​​பாதிக்கப்பட்ட இருவரும் முன் இருக்கையில் படுத்துக் கொண்டிருந்ததாகவும் காயத்திற்கான அறிகுறிகள் அல்லது குற்றவியல் கூறுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் வாகனத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறி இறந்ததாக சுல்கைரி (Dzulkhairi) தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு , மேலும் பிரேத பரிசோதனை முடிந்ததும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.

நேற்று நள்ளிரவு மணி 12.24 மணிக்கு பொதுமக்களிடமிருந்து போலீஸ் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. அந்த இருவரும் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்ததாக மலாக்கா போலீஸ் தலைமையக தடயவியல் பிரிவு மற்றும் மலாக்கா மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த நேரத்தில், எந்த குற்றவியல் கூறுகளும் அல்லது தற்கொலை முயற்சியும் கண்டறியப்படவில்லை. முழு பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்று சுல்கைரி (Dzulkhairi) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!