
புத்ராஜெயா, செப்டம்பர்-22,
செப்டம்பர் 30 முதல், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள் RON95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் பெற முடியும்.
இந்த Budi MADANI RON95 (BUDI95) திட்டம் சுமார் 16 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
போலீஸ் மற்றும் இராணுவத்தினர் செப்டம்பர் 27 முதல் புதிய விலையைப் பெறுவார்கள்; அதே நேரம் STR உதவித் தொகை பெறுவோர் செப்டம்பர் 28 முதல் சலுகை எரிபொருளைப் பெற முடியும்.
மானியம் பெறுவதற்கு, வாகனமோட்டிகள் பெட்ரோல் நிலையத்தில் MyKad அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
அல்லது Touch ’n Go மற்றும் Petronas Setel செயலிகளைப் பயன்படுத்தி எளிதாகப் பரிவர்த்தனை செய்யலாம்.
ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, வெளிநாட்டவர்களும்பெரு நிறுவனங்களும் இந்த மானிய விலைக்குத் தகுதி பெறமாட்டார்கள்; அவர்கள் ஒரு லிட்டருக்கு சுமார் RM2.60 என்ற முழு விலையைச் செலுத்த வேண்டும் என அன்வார் அறிவித்தார்.
எது எப்படி இருப்பினும், மலேசியாவின் எரிபொருள் விலை இன்னமும் வெளிநாடுகளை விட குறைவாகவே உள்ளது…குறிப்பாக சவூதி அரேபியா RM2.61, இந்தோனேசியா RM3.22, பிலிப்பின்ஸ் RM4.22, தாய்லாந்து RM5.68, சிங்கப்பூர் RM9.02 என்ற விலையில் விற்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்