
பாங்காக் செப்டம்பர்- 24,
கடந்த புதன்கிழமை பாங்காக்கில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 50 மீட்டர் ஆழமுள்ள பெரிய குழி ஒன்று மருத்துவமனைக்கு முன்பாகவே ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவம் பொதுப் பயன்பாட்டு வசதிகளை கடுமையாக பாதித்ததுடன், கடும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட ஆய்வில், நிலச்சரிவு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டிடப் பகுதியில் ஏற்பட்டதால், இரண்டு மின்கம்பத் தூண்களும், லாரி ஒன்றும் அந்தக் குழியில் விழுந்தன.
அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களுக்கு வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அதேசமயம், மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, மருத்துவமனை நோயாளிகளும் சுற்றுப்புற மக்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வழிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
அரசு அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்போ, யாருக்கும் எவ்வித காயமோ ஏற்படவில்லை என்பதனை உறுதிப்படுத்தினர்.