
கோலாலம்பூர், செப்டம்பர்-26,
மலேசியத் தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ‘ஜகாட்’ மீண்டும் திரையரங்குகளுக்குத் திரும்புகிறது.
இயக்குநர் சஞ்சய் “Sun-J” குமார் பெருமாள் இயக்கிய இத்திரைப்படம், 2015-ல் வெளியானது.
அதன் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அப்படம் மறு வெளியீடு காண்கிறது.
நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி, LFS PJ State திரையரங்கில் சிறப்பு காட்சியுடன் தொடங்கிய இந்த மறு வெளியீடு, அக்டோபர் 3 முதல் அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்படும்.
இதனிடையே, சிறப்பம்சமாக, முதன் முறையாக சபா – சரவாக் மாநிலங்களிலும் ‘ஜகாட்’ திரையிடப்படவிருக்கிறது.
இந்த மறுவெளியீட்டில் மொத்தம் 25 திரையரங்குகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில்,– 2015ல் 18 திரையரங்குகளுடன் ஒப்பிடுகையில் இது பெரும் முன்னேற்றமாகும்.
புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை நேர்மையாக சித்தரித்ததற்காக விமர்சகர்களால் இப்பொழுது வரை புகழப்பட்ட்டு வருகிறது இந்த ‘ஜகாட்’ திரைப்படம்.
இதனிடையே, படம் வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் தாக்கத்தை மீண்டும் பெரிய திரையில் காண ஆவலாக இருப்பதாக, இயக்குநர் Sun-J வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இரசிகர்கள் மீண்டும் இம்முறை பேராதரவை அளிப்பர் என இந்த சிறப்புக் கட்சியில் பங்கேற்ற சில உள்ளூர் கலைஞர்களும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
இவ்வேளையில், அப்படத்தின் மையக் கதாராபத்திரமான ‘அப்போய்’ யின் மாற்று வாழ்க்கைப் பாதைகளை ஆராயும் இரண்டு ஆன்மிகத் தொடர்ச்சித் திரைப்படங்களான மாச்சாய் மற்றும் bluesசை இயக்கியுள்ளார் சஞ்ஞேய்.
அவ்வகையில் ‘மாச்சாய்’ எதிர்வரும் நவம்பர் 13-ஆம் தேதியும் , Blues டிசம்பர் 4-3ஆம் தேதியும் நாடு தழுவிய நிலையில் திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது.
ஜகாட் திரைப்படத்தின் வெற்றி, இந்த திரைப்படங்களுக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும்.