
சென்னை, செப்டம்பர்-29,
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் அங்கு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எங்கிருந்து மின்னஞ்சல் வந்தது என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நிகழ்ந்த அந்த அசம்பாவிதம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு இந்திய அதிபர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட போலீஸ் குழு விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.