ஃபார்முலா 1 பந்தய ஓட்டுநர் தனது ஹாமில்டன் அன்புக் குட்டி நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

பாரிஸ், செப்டம்பர் -30,
உலகப் புகழ் பெற்ற ஃபார்முலா 1 (Formula 1) பந்தய ஓட்டுநர் ஹாமில்டன் (Hamilton), தனது செல்லப்பிராணியான நாய்குட்டி “ரோஸ்கோ”வின் மரணத்தால் பெரும் துயரடைந்துள்ளார்.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ரோஸ்கோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்தியபோது உயிரிழந்தது.
இதுகுறித்து தனது 4.08 கோடி இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களிடம் பகிர்ந்த ஹாமில்டன், தானும் ரோஸ்கோவும் பகிர்ந்த வாழ்க்கை தருணங்கள் தன் வாழ்வின் மிகப் பெரிய வரம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹாமில்டன் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஸ்கோவை தத்தெடுத்த போது அப்போது அவருடன் “கோகோ” எனும் மற்றொரு புல்டாக் நாயும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஸ்கோவை இழந்த துயரைப் பகிர்ந்த ஹாமில்டன், “ஒரு செல்லப் பிராணியை இழப்பது எவ்வளவு வலியான அனுபவம் என்பதை இப்போது உணர்கிறேன். ஆனால், அவனைப் பெற்றிருப்பது என் வாழ்வின் அழகான அத்தியாயங்களில் ஒன்று” என்று நெகிழ்ந்துள்ளார்.