Latestமலேசியா

BNM-இன் புதிய கட்டுப்பாடுகள்: RM100,000-ஐ மீறும் தனிப்பட்ட கடன்களுக்கு நிதிக் கல்வி கட்டாயம்

கோலாலம்பூர், அக்டோபர் 1 –

குடும்பக் கடன்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றால் உருவாகும் ஆபத்தை குறைக்க மலேசிய தேசிய வங்கி (BNM) தனிப்பட்ட கடன்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இதன் கீழ், 100,000 ரிங்கிட்டை மீறும் தனிப்பட்ட கடன்களுக்கு விண்ணப்பிப்போர்கள், கட்டாயமாக நிதிக் கல்வி தொகுதியை (financial education module) பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட தனிப்பட்ட நிதியுதவி கொள்கை ஆவணம் (Personal Financing Policy Document) மூலம், மலேசிய தேசிய வங்கி வாடிக்கையாளர்களும், நிதி சேவை நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டிய தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இந்த விதிகளின் படி, உறுதியற்ற தனிப்பட்ட கடன்களுக்கு அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளைத் தாண்டக்கூடாது என்றும் தனிப்பட்ட தேவைக்காக சொத்துகளை அடமானமாக வைத்து எடுக்கப்படும் கடன்களுக்கும் இந்த வரம்பு பொருந்தும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமவீத (flat-rate) வட்டி கணக்கீடு மற்றும் Rule 78 எனப்படும் பழைய முறைப்படி வட்டி அல்லது இலாபம் வசூலிக்கும் தயாரிப்புகள் முற்றிலும் தடை செய்யப்படுகின்றன.

இதற்குப் பதிலாக, நிதி நிறுவனங்கள் உண்மையான (effective) வட்டி விகிதத்தை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என Bank Negara வலியுறுத்தியுள்ளது.

கடன் சந்தையில் உள்ள கடும் போட்டியால், நிதி நிறுவனங்கள் வழங்கும் சில புதிய தயாரிப்புகள் மலிவானதாகத் தோன்றினாலும், அவை வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத்தில் ஆபத்தான கடன் சுமையை ஏற்படுத்துகின்றன.

சேமிப்புகள் போதிய அளவில் இல்லாத நிலையில், இத்தகைய தயாரிப்புகள் குடும்பங்களை தீவிர நிதி நெருக்கடிக்கு தள்ளும் அபாயம் உள்ளதாக தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும், இஸ்லாமிய வங்கிகளும், மேம்பாட்டு நிதி நிறுவனங்களும், புதிய கடன் விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் நிதி வசதிகளுக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தகுதியையும் திருப்பிச் செலுத்தும் திறனையும் மதிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அறிவுறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!