Latestஉலகம்

நியூயோர்க்கில் விமானங்கள் தரைத்தளத்தில் மோதிய பரபரப்பு சம்பவம்

நியூயார்க், அக்டோபர் 2 – நியூயார்க் நகரின் லா குவார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Air Lines) நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் நேற்றிரவு தரையில் ஒன்றையொன்று மோதி கொண்டன.

வலைத்தளத்தில் வைரலான காணொளியில், ஒரு விமானத்தின் வலது இறக்கை மற்றொரு சிறிய விமானத்தின் முன்பகுதியுடன் மோதியதைக் காண முடிந்தது.

அவ்விரண்டு விமானங்களில் ஒன்று தரையிறங்கியதும் திடீரென வளைந்து, பிரேக் போட்டபோது இந்த மோதல் ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.

இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென்று உள்ளூர் ஊடகம் கூறியது.

கடந்த மாதங்களில் லா குவார்டியாவில் பல விமான சம்பவங்கள் பதிவாகி, மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விமானப் பாதுகாப்பு குறித்த அச்சங்களை வலியுறுத்தும் தொழிலாளர் மற்றும் விமானத் துறை அமைப்புகளின் கடிதம் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த மோதல் நடந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!