Latestமலேசியா

இஸ்ரேல் தடுத்து வைத்த அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும் பாதுகாப்பாக உள்ளனர்; விரைவில் தாயகம் திரும்புவர் – விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய உதவிக் குழுவில் இடம் பெற்றிருந்தபோது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர்.

வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்றாம் தரப்பு நாடுகள் மூலமாக அவர்கள் விரைவில் தாயகம் அனுப்பப்படுவர்.

பாதுகாப்பாக நாடு வந்துசேருவதை உறுதிச் செய்வதற்குண்டான அனைத்து தூதரக உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அது கூறிற்று.

மலேசியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட ஏதுவாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் இருவரும் அமெரிக்கா உள்ளிட்ட சில நட்பு நாடுகளிடம் பேசி ஒத்துழைப்புக் கோரியதும், அதனை சாத்தியமாக்கியதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.

Flotilla தன்னார்வலர்களின் கைது சட்டவிரோதமானது; எனவே அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்டு இஸ்ரேல் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென முன்னதாக மலேசியா வற்புறுத்தியிருந்தது.

பாலஸ்தீனர்களுக்கு ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கவும், இஸ்ரேலின் தடைகளை உடைக்கவும் ஏதுவாக, மலேசியா உள்ளிட்ட 44 நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் காசாவை நோக்கி இந்த Flotilla மனிதநேயத் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இஸ்ரேலியப் படைகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்களை சிறு சிறு கப்பல்கள் மற்றும் படகுகள் வாயிலாக அவர்கள் கொண்டுச் செல்கின்றனர்.

மற்றொரு நிலவரத்தில்,
கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு மற்றும் Global Sumud Flotilla ஒற்றுமை பேரணியில் போலீஸார் காவல்துறையினரால் கைதுச் செய்த 2 போராட்டக்காரர்கள், அரசாங்க ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்ததற்காக விசாரிக்கப்படுவார்கள்.

அவர்கள், மதியம் 12 மணியளவில் தூதரகத்தின் முன் சுமார் 50 பங்கேற்பாளர்கள் கூடியிருந்தபோது ஏற்பட்ட கலவரத்தின் போது அதிகாரிகளை எதிர்த்த 23 மற்றும் 32 வயதுடைய ஆடவர்களாவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!