
புத்ரா ஜெயா, அக்டோபர் -6,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் முழுவதும் 72 பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். எனினும் பள்ளிகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் பத்லினா சிடேக் ( Fadhlina
Sidek ) கூறினார். ஆன்லைனில் வகுப்புகள் 72 பள்ளிகளை உள்ளடக்கியிருப்பதாக பகடிவதைக்கு எதிரான புத்ரா ஜெயா வரைந்துவரும் சட்டம் குறித்து பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.
மே மாதம் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது வீட்டில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையை செயல்படுத்த 71 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டன. 47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு மற்றும் அது தொடர்பான மாநாடுகள் அக்டோபர் 26ஆம் தேதி முதல் 28 ஆம்தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளன.