Latestமலேசியா

கால்பந்து உலகின் முதல் கோடீஸ்வரர் ஆனார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

நியூ யோர்க், அக்டோபர்-9,

உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனைப் பட்டியலில் மற்றொரு மகுடமாக, கால்பந்து உலகின் முதல் கோடீஸ்வரர் (billionaire) அந்தஸ்தை அவர் அடைந்துள்ளார்.

40 வயது ரொனால்டோவின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என, பிரபல நிதித் தகவல் மற்றும் ஊடக நிறுவனமாக Bloomberg மதிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் (All Nassr) அணியுடன் அவரின் சேவை ஒப்பந்தம் $400 டாலர் மதிப்பில் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது, ரொனால்டோ கோடீஸ்வரரானதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

மேலும், இது நாள் வரையிலான ‘மெகா’ சம்பளம், Nike, Armani போன்ற வணிக முத்திரைகளுக்கான விளம்பர ஒப்பந்தங்களும் அவரின் செல்வதை கூட்டியுள்ளன.

உலக விளையாட்டு வரலாற்றில், ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தில் இருந்த Michael Jordan, LeBron James, Roger Federer போன்றோர் ஏற்கனவே கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தாலும், கால்பந்து கண்ட முதல் கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு இந்த போர்ச்சுகல் கேப்டன் சொந்தக்காரராகியுள்ளார்.

தீவிர கால்பந்து என வரும்போது 40 வயதில் கிட்டத்தட்ட அனைவருமே ஓய்வுப் பெற்று விடும் நிலையில், ரொனால்டோ இன்னமும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

கிளப்புக்காகவும் நாட்டுக்காகவும் இன்னும் தான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது எனக் கூறி வரும் ரொனால்டோ, அடுத்தாண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதை கடைசி இலக்காகக் கொண்டுள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!