
சிக், கெடா, அக்டோபர் 9 –
நேற்று கெடா சிக் கம்போங் பாங்கோல் டாலமில் (Kampung Banggol Sik Dalam) கிங் கோப்ரா’ (King Cobra) எனப்படும் ராஜ நாகம் திடீரென தனது வீட்டின் முன்னால் தோன்றியதை கண்டு அதிர்ச்சியடைந்த 16 வயது இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பி சென்றார்.
இளைஞர் தன்னை பாதுகாத்துக்கொண்டபோதும், மோட்டார் சைக்கிளின் பிரேக்கில் அந்த நான்கு மீட்டர் நீளம் கொண்ட King Cobra சிக்கி கொண்டது.
தகவல் கிடைத்ததும், சிக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத்தின் (BBP Sik) தலைவர் உதவி தீயணைப்பு அதிகாரி முகமட் ஜாமில் மாட் டாவுட் (Mohd Jamil Mat Daud) தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது.
இந்நிலையில் அதிகாரிகள் பாம்பு பிடிக்கும் கருவியைப் (penjerut) பயன்படுத்தி அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து அகற்றினர்.
மேலும் அந்த இளைஞர் எந்தக் காயங்களுமின்றி நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.