
கோலாலாம்பூர், அக்டோபர்-15,
‘வணக்கம் மலேசியா’ நடத்தும் மாணவர் முழக்கம் 2025 இப்போது அதன் அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது.
13-ஆவது ஆண்டாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் மொழித் திறன், சிந்தனை ஆற்றல், மற்றும் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தும் சிறந்த மேடையாக மாணவர் முழக்கம் திகழ்கிறது.
இவ்வாண்டு நாடு முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் காணொளிகளைப் போட்டிக்கு அனுப்பினர்.
அதிலிருந்து 50 மாணவர்கள் கடந்த அக்டோபர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்ற காலிறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 20 சிறந்த மாணவர்கள் அரையிறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
அவர்களின் நாவன்மையும் பேச்சுத் திறனும் வியப்புக்குரியதாக இருந்தாக போட்டி நடுவரான வழக்கறிஞரும் தமிழ் ஆர்வலருமான கனல்வீரன் பாராட்டினார்.
இவர்களில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வெற்றியை தன்வசப்படுத்தப் போகும் அந்த மாணவர் யார்?
முத்தமிழின் மணமோடு களம் காணும் அனைத்து மாணவர்களுக்கும், வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இவ்வாண்டு மேலுமொரு தரமான மற்றும் நெருப்பான மாணவர்களின் படைப்பை கண்டுகளிப்போம் வாருங்கள்.