DAP கட்சியின் ஊடகவியலாளர்களுடனான தீபாவளி உபசரிப்பு

கோலாலம்பூர், அக் 16 –
டி.ஏ.பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி அதன் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தலைமையில் நேற்று தமிழ் ஊடங்களுக்கான விருந்தை ஏற்பாடு செய்தது.
செந்தூல் ஜெய்ப்பூர் மஹால் உணவகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் வணக்கம் மலேசியா, மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர், தமிழ் ஊடகவியாளர்களுடன் மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தழிழ் மன்னன் மற்றும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்களுடன் நல்ல நட்புறவு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் ஆண்டுதோறும் தீபாவளி விருந்து உபசரிப்பில் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்தகொண்டது குறித்து மகிழ்ச்சியடைவதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பரா நாயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் , பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ,எஸ்.என் ராயர் மற்றும் சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு நெடுஞ்சாலை பயணர்களுக்கு மடானி அரசாஙகம் அறிவித்த 50 விழுக்காடு டோல் கட்டணம் கழிவு உட்பட பல்வேறு சலுகைகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருந்து நடத்தப்பட்டதாக அந்தோனி லோக் கூறினார்.
மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கும் நல்லதொரு நட்புறவுப் பாலமாகவும் ஊடகங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலை தொடர வேண்டும் என அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார்.