Latest

பூஜ்ஜிய கழிவு நிபுணர்கள் மற்றும் உலகளாவிய பங்காளிகளுடன் மலேசியாவின் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டது – ஙா கோர் மிங்

இஸ்தான்புல், அக்டோபர்-18,

மலேசியா, Global Zero Waste Forum 2025 மாநாட்டில் உலகளாவிய ‘சுழற்சி இல்லா கழிவு’ மற்றும் நிலைத்த நகர மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தியுள்ளது.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரும் ஐநாவின் UN-Habitat அமைப்பின் தலைவருமான ங்கா கோர் மிங், துருக்கியே தலைநகர் இஸ்தான்புலில் நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய இருதரப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அதன் போது, UN-Habitat நிர்வாக இயக்குனர் அன்னாகிளாவ்டியா ரோஸ்பாக்குடன் (Annaclaudia Roserbach) 2026–2029 வியூகத் திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

அதில் குறைந்த விலை வீடுகள், சமமான நகர சேவைகள், மற்றும் நில உரிமை பாதுகாப்பு குறித்து முக்கியமாக பேசப்பட்டது.

இருவரும் “Road to Belém” முயற்சியை முன்னெடுத்து, COP30 மாநாட்டுக்கான பாதையில் ‘Zero Waste’ கொள்கைகளை இணைக்க ஒப்புக் கொண்டனர்.

“Zero Waste in Action: People, Places, Progress” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த 3-நாள் மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 118 அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நிலைத்த மற்றும் கழிவில்லா நகரங்களை உருவாக்க உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!