Latestமலேசியா

ஆசியான் உச்ச மாநாடு போது போக்குவரத்து போலீஸ்காரர் விபத்தில் காயம்

 

கோலாலம்பூர், அக்டோபர் -27,

நேற்று, ஆசியான் 47ஆவது உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதிகள் பயணித்த வாகனங்களை பின்தொடர்ந்த போக்குவரத்து துறை (JSPT) போலீஸ்காரர் ஒருவர், ஜாலான் துன் ரசாக் கோலாலம்பூர் உலக வர்த்தக மைய (WCT) சாலையில் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்தார்.

இது இந்த மாநாட்டின்போது ஏற்பட்ட இரண்டாவது விபத்தென்பது குறிப்பிடத்தக்கது.

25 வயதான அந்த போலீஸ்காரர் இடது கை முட்டியில் எலும்பு முறிவு மற்றும் உதட்டில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

பெரோடுவா ஆல்சா  வகை பல்நோக்கு வாகனம் ஒன்று திடீரென இடது வழியிலிருந்து வலது வழிக்குத் திரும்பியதால் Honda VFR மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த போலீஸ் அதிகாரியின் மீது வாகனம் மோதியது என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர், டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெறும் நாட்களில் போக்குவரத்து போலீஸின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!