
புதுடில்லி, அக் 28-
டில்லி விமான நிலையத்தின் 3ஆவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து இன்று மதியம் தீப்பிடித்தது.
பல விமான நிறுவனங்களுக்கு தரைவழி சேவைகளைக் கையாளும்
SATS விமான நிலைய சேவைகள் தனியார் லிமிடெட் மூலம் நடத்தப்படும் இந்தப் பேருந்து, தீப்பிடித்தபோது அந்த இடம் காலியாக இருந்தது.
அந்த பேருந்து பெரிய தீயில் மூழ்கியதை அது தொடர்பான காணொளியில் காண முடிந்தது.இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகளைக் கையாளும் டெல்லி அனைத்துலக விமான நிலைய லிமிடெட் , இதை “தவறான சம்பவம்” என்று வருணித்ததோடு எவரும் காயத்திற்கு உள்ளாகவில்லை என்று தெரிவித்தது. தரையில் இருந்த நிபுணர் குழு உடனடியாக செயல்பட்டு தீயை சில நிமிடங்களில் அணைத்தது.
சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து நிலையாகவும் முழுமையாக காலியாகவும் இருந்தது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து இயல்பாகவே உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



