
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29,
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
80-க்கும் மேற்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 2,500 போலீஸார் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்ட இந்த மாபெரும் நடவடிக்கை, Comando Vermelho என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பலை குறிவைத்து நடத்தப்பட்டது.
சோதனை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையில் ரியோவின் வடக்கு பகுதியில் உள்ள பல குடிசைப் பகுதிகளில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
நேரில் பார்த்த சாட்சிகள் அதை ‘போர்க்களம்’ என விவரித்தனர்.
பதற்றத்தில் பள்ளிகளும் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் சிலர் பொது மக்களாக இருக்கலாம் எனக் கூறி, மனித உரிமை அமைப்புகள் விசாரணைக் கோரியுள்ளன.
ஆனால், ரியோ மாநில ஆளுநரோ அதை “போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்” என வருணித்துள்ளார்.
விமர்சகர்கள் தரப்பில், இது பிரேசிலியப் போலீஸ் மெல்ல இராணுவமயமாக்கப்படுவதைக் காட்டுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.



