Latestமலேசியா

குழந்தையை படிக்க வற்புறுத்தினால் பெற்றோருக்கு RM1,600 வரை அபராதம்; வியட்நாமில் புதிய சட்டம்

ஹனோய், நவம்பர்-6 வியட்நாமில், குடும்பத்திற்குள் குழந்தைகள் அல்லது பிற உறவினர்களை படிக்கச் சொல்லி ‘தொந்தரவு’ செய்யும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

மலேசிய ரிங்கிட்டுக்கு 800 முதல் 1,600 வரை அபராதம் விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.

அதே சமயம் பிள்ளைகளுக்கு உரியக் கல்வியை வழங்கத் தவறும் குடும்ப உறுப்பினர்களும் தப்ப முடியாது.

அவர்களுக்கு 3,200 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதே சமயம் தேவைப்பட்டால், ‘குற்றவாளிகள்’ பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நேரிலேயோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ மன்னிப்புக் கேட்க வேண்டும்.

வரும் டிசம்பர் 15 முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வருகிறது.

இந்த உத்தரவின் முக்கிய நோக்கமே, குழந்தைகள் கல்வியிலிருந்தும் பிற சமூக உறவுகளிலிருந்தும் விலகாமல் சரியான ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறுவதை உறுதிசெய்வதே என வியட்நாமிய அரசு கூறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!