Latestமலேசியா

பாலாக்கோங்கில் இரவோடு இரவாக பற்றி எரிந்த காடு

செராஸ், நவம்பர்-7,

சிலாங்கூர், பாலாக்கோங், தாமான் ஸ்ரீ தீமாவில் உள்ள காடு நேற்றிரவு தீப்பற்றி எரிந்தது.

குன்றின் மீதுள்ள காட்டுப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பை அது உட்படுத்தியிருந்தது.

உயரமான இடமென்பதால் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் இரவோடு இரவாக சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்நிலையில் 7 மணி வாக்கில் தகவல் கிடைத்து, செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், பாலாக்கோங் என சுற்று வட்டார தீயணைப்பு-மீட்புப் படையினர் சம்பவ இடம் விரைந்தனர்.

தீயை அணைக்க அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

தீக்கான காரணமும் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!